Saturday, May 25, 2013


வளையல் பெண்ணின் உதயகீதங்கள்
கீதம் 5 : பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் 
 
 
 
 
   
 
 
      நடிகர் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் அசத்தியமைக்கல்,மதன,காம,ராஜன் என்ற திரைப்படம் என்னைக் கவர்ந்த   அவருடைய படங்களில் ஒன்று.நடிகர் கமலோடு,நாகேஷ்,ஊர்வசி,குஷ்பூ,ரூபினி,நாசர்,வெண்ணிற ஆடை மூர்த்தி,,சந்தானபாரதி,மனோரமா,டெல்லிகணேஷ்,ஜெயபாரதி,ஆர்.என்.கிருஷ்ணா,பிரவின்குமார் ஆகிய பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து  கலக்கிய படம்.பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் நடிகர் கமல் திரைக்கதை எழுதி,சங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கிய இப்படத்திற்கு கிரேஸிமோகன் வசனம் எழுதியிருப்பார்.கலாட்டா காட்சிகள் நிறைந்த இந்த நகைச்சுவைப் படத்திற்கு இளையராஜாதான் இசை.1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்ட இந்தத் திரைப்படத்தில் கதை கேளு கதை கேளு,சுந்தரி நீயும்,ரம்பம்பம்,சிவராத்திரி,பேர் வெச்சாலும் ஆகிய இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தன.அனைத்துப் பாடல்களிலும் பலரால் இரசித்துப் பார்க்கப்பட்ட பாடல் எனில் அதற்குக் காரணம் அக்காட்சி படமாக்கப்பட்ட விதம்தான்.மறைந்த மலேசியா வாசுதேவனும்,ஜானகியம்மாவும் பாடியிருக்கும் இப்பாடலை    எழுதியுள்ளார்.
   எனக்கு மிக மிகப் பிடித்தமான இந்தப் பாடலைப்பற்றி பதியும்முன் படத்தில் ஆரம்பத்திலிருந்து வரும் சில காட்சிகளை நான் சொல்லியாகவேண்டும்.ஏனெனில் இப்பாடலோடு பல காட்சிகள் பிணைந்துள்ளன.
    கோடீஸ்வரரான வேணுகோபால் ஒரு பெண்ணோடு நெருங்கிப் பழக அந்தப் பெண் திருமணமாகும் முன்னரே கர்ப்பமாகிவிடுகிறார்.விபரம் அறிந்ததும் வேணுகோபால் அப்பெண்ணை ஏமாற்றாமல் திருமணம் செய்துகொள்ள  எண்ணுகிறார்.அண்ணனின் சொத்துக்காக சொந்தத் தம்பியே அந்தப் பெண்ணைக்  கொன்றுவிட துணிகிறான்.அந்தப் பெண் தப்பியோடி ஒரு வீட்டில் அடைக்கலமாகிறாள்.அவளுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறக்க,அவள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்ட தம்பி சந்தானபாரதியை அனுப்பி நான்கு குழந்தைகளையும் கடத்தி,கொன்றுவிடுமாறு பணிக்கிறான்.குழந்தைகளில் ஒன்றைக் கொல்லப் போகும் சமயம் அந்தப் பிஞ்சு சந்தானபாரதியின் கழுத்தில் இருக்கும் சிலுவையைப் பற்றிக்கொள்ள,மனம் இரங்கிய சந்தானபாராதி தான் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு மற்ற மூன்று குழந்தைகளையும் தனித்தனியே வெவ்வேறு இடத்தில் விட்டுவிடுகிறார்.அவற்றில் ஒன்று தந்தையிடமே வளர்கிறது.நான்கு பேரும் வளர்ந்து வாலிபனான பிறகு சொத்துக்காக நடக்கும் ஆள்மாறாட்டாம்தான் கதை.
    நான்கு கமலும் தோன்றும் இந்தப் பாடல் காட்சிக்குச் சம்பந்தம் இருப்பதால் அந்த நான்கு கமலும் சந்தித்துக்கொள்ளும் காட்சியையும் சொல்லியாகவேண்டும்.மதனகோபால் வேணுகோபாலின் வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தவர்.லண்டனில் படித்துவிட்டு திரும்பி வந்தவர்.மீசையில்லாத முகம்,கண்ணாடி,நுனிநாக்கு ஆங்கிலம் என அசத்தலான தோற்றத்தில் இருப்பவர்.அவருக்கு ஜோடி சாந்தாபாய் (ரூபினி).ஆதரவற்று வளரும் ராஜூ மீசை,கிருதாவோடு தீயணைப்பாளராக வருபவர்.அவர் விரும்புவது ஷாலினியை (குஷ்பூ).பாலக்காட்டு சமையல்காராரால் தத்து எடுக்கப்பட்டு சமையல்காரனாக மீசையில்லாத முகம்,மலையாள வாடை வீசும் பேச்சு,வேட்டி என வெள்ளந்தியாக வலம் வரும் காமேஸ்வரனுக்கு திரிபுரசுந்தரியோடு(ஊர்வசி) காதல்.சந்தானபாரதியிடம் வளர்ந்து திருடனாக,தாடி,மீசையோடு முன்புறம் ஓட்டைப் பல்லோடு வருபவர் மைக்கல்.
    மதன் லண்டனில் இருக்கும்போது அவரது வளர்ப்புத் தந்தையைக் பள்ளத்தில் விழவைத்து கொல்ல முயற்சிக்கிறார்கள் .அவ்விபத்தில் அவர் உயிர் பிழைத்துவிட்டதை அறியாமல் அவசர அவசரமாக அவரது சொத்துகளுக்கு தான்தான் வாரிசு என சொல்லிக்கொண்டிருக்கும்போதே மதன் வந்துவிடுகிறார்.தன் சிற்றப்பாவையும்,அவரது மகனான நாசரையும் தனது உதவியாளர் பீம்போய் ( பிரவின்குமார்) மூலம் மிரட்டி,வெளியே அனுப்பிவிடுகிறார்.பணத்தைக் களவாடி மோசடி செய்ததற்காக அவினாசியையும்(நாகேஷ்) வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்.
  அதன்பிறகு மதனுக்கு பெங்களூருக்கு வரச்சொல்லி ஓர் அழைப்பு வருகிறது.அந்த அழைப்பை ஒட்டுக்கேட்ட நாகேஷ் மதன் பெங்களூர் போகும் விசயத்தை நாசரிடம் சொல்லிவிட,அவர்கள் மதனைக் கொல்வதற்காக ஆள் அனுப்பிவிட,அங்குதான் ஆள்மாறாட்டம் ஆரம்பமாகிறது.பெங்களூரில் தன்னைக் காப்பாற்றிய தீயணைப்பாளர் ராஜூவை கொஞ்சநாளைக்கு தன்னை மாதிரி நடிக்க சொல்லிவிட்டு,தன் தந்தையைப் பற்றிய  ரகசியத்தைக் கண்டுபிடிப்பதற்காக அங்கேயே தங்கிவிடுகிறான் மதன்.சென்னைக்குக் காரில் திரும்பவிருக்கும் ராஜூவை மதன் என நினைத்து,தீர்த்துக்கட்டுவதற்காக காரின் பிரேக்கைக் கழற்றிவிடும் பொறுப்பை மைக்கலிடம் ஒப்படைக்க பணத்திற்காக அக்காரியத்தைச் செய்யும் மைக்கல் கொஞ்சநேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு  போகலாம் என அந்தக் காரில் ராஜூ கிளம்பி செல்வதைப் பார்க்கிறான்.அப்போது மாறுவேடத்திலிருந்த மதன் தன் பர்தாவைக் கழற்றி எறிந்துவிட்டு நடக்க,அவனைப் பார்த்த மைக்கல் ஆச்சரியமடைகிறான்.தன்னை மாதிரியே இருக்கும் மதனைக் கட்டையால் அடித்து மயக்கமடைய செய்துவிட்டு மலை உச்சியிலிருக்கும் ஒரு வீட்டில் கொண்டுபோய் ஒளித்துவைக்கிறார்.அங்கே மதனோடு இருந்த  தன் நிஜ பெற்றோரையும் அறியாத மைக்கல் அவர்களையும் அதே இடத்தில் அடைத்துவைத்துவிட்டு தன் தோற்றத்தை மதன்மாதிரியே மாற்றிக்கொள்கிறான்.
   அதே நேரத்தில் காமேஷ்வரனுக்கும்,திரிபுரசுந்தரிக்கும் திருமணம் முடிந்து  ஊர்வலம் நடப்பதைப் பார்த்துவிடும் அவினாசி மதனின்  லாக்கரில் இருக்கும் தன் பணத்தை எடுப்பதற்காக காமேஷ்வரனை  சில நாள் மதனாக நடிக்கவைக்க திட்டம் தீட்டுகிறார்.பணத்திற்காக எதையும் செய்யும் திரிபுரசுந்தரியின் திருட்டுப் பாட்டியைப் பணம் கொடுத்து தன் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் அவினாசி காமேஷ்வரனுக்கு நவீன உடை அணிவித்து,கண்ணாடியும் மாட்டிவிட்டு,’பீம்போய் பீம்போய்,லாக்கர்ல இருக்கற அந்த ஆறுலட்சத்தை எடுத்துக்கொடு என்ற வசனத்தைச் சொல்லிக்கொடுத்து அழைத்து வருகிறார்.னுக்கு மிகவிசுவாசமாகஇருக்கும் பீம்போய்(பிரவின்குமார்)ன் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்துமுடிப்பன் என்பதாம் அந்தத்திட்டம்.
    ராஜூ மதனின் மாளிகையில் குஷ்பூவையும் அவள் அப்பாவையும் விருந்தினர் அறையில்  தங்கவைக்கிறான்.தன் அப்பாவுக்குத் தெரியாமல் ராஜுவைச் சந்திக்க ஆசைப்படும் ஷாலினி லையணைகளை அடுக்கி போர்வையால் மூடிவிட்டு ருகிறாள்.அவர்கள் இருவரும் மாளிகையில் இருக்கும் பூங்காவில் சந்திக்க திட்டம் தீட்டுகிறார்கள்.நீங்கள்  எந்த நிற உடையில் வருவீர்கள் என ஷாலினி கேட்க,அவளைத் திருப்பி கேட்கிறான் ராஜூ.அவள் தான் கருப்பு,வெள்ளையில் வரப்போவதாக சொன்னதும்,’அப்படின்னா நான் கலர்ல ரிலீஸ் ஆகிடறேன்,’ என்கிறான்.’அடிக்கடி டிரஸ் மாத்திக்கிட்டே இருக்கேன் என்கிறான் விளையாட்டாய்.
    காமேஷ்வரனோடு  சென்னை திரும்பும் அவினாசி,தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதன் என நினைத்து ராஜூவுக்குத் தயாரான சூப்பில் மயக்கமருந்தை கலந்து கொடுத்துவிடுகிறார்.அந்த சூப்பைக் குடிப்பதற்காக வாயில் வைத்த ராஜூ சூடாக இருந்ததால் பீம்போயிடம் குடிக்க சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.
   தோட்டத்தில் ராஜுவும்,ஷாலினியும் சந்தித்துப் பேசும் வேளையில் மைக்கலும்,அவன் தந்தையும் பணம் இருக்கும் லாக்கரின் அருகில் போய் நிற்கிறார்கள்.பையை கீழேயே மறந்துவிட்டதாக சொல்லிவிட்டுப் போகும் சந்தானபாரதி மைக்கலை அழைத்து காட்டுகிறார்.அங்கு பேசிக்கொண்டிருந்த ராஜுவையும்,ஷாலினியையும் பார்த்துவிட்டு மதன் தப்பித்துவந்துவிட்டதாக எண்ணி கையில் உருட்டுக்கட்டையை எடுத்துக்கொள்கிறார்.
   ஷாலினியிடம் அவள் நினைப்பதுபோல் தான் பணக்காரன் அல்ல என்ற உண்மையைச் சொல்ல நினைக்கும் ராஜுவிடம் பணத்துக்காக தான் காதலிக்கவில்லை என சொல்லி ' லவ் யூ' என சொல்கிறாள் ஷாலினி.ராஜூ சந்தோசமாகிறான்.அப்போது மைக்கலும்,அவன் அப்பாவும் கொடுத்து கொள்ளும் சைகையே பாடலின் ஆரம்ப இசையாக ஒலிக்க,'பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்' என்ற பாடல் தொடர்ந்து ஒலியேறுகிறது.
      அந்தப் பாடல் காட்சி முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே அமைக்கப்பட்டிருந்தது.நான்கு கமலும் அந்தப் பாடல் காட்சியில் வந்து போவார்கள்.ராஜூ,ஷாலினியோடு ஆடிக்கொண்டிருக்கும்போது நாகேஷ் கமலேஷ்வரனை இழுத்துக்கொண்டு வருவார்.பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கும் காமேஷ்வரன் டாலென ஊர்வசியின் காலிலும் விழப்போக,ஊர்வசி எகிறி குதிக்க செம கலாட்டா.அந்தக் காட்சி ஷாலினியின் அப்பாவாக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் கண்ணில் பட ராஜூ யாரோ ஒரு பெண்ணோடு வருகிறானே என குஷ்பூவின் மெத்தையை நெருங்கி ஆள்காட்டி விரலால் குத்திப் பார்க்க அவருடைய விரல் உள்ளே அமுங்க,உடனே போர்வையை விளக்கிப் பார்ப்பார்.உண்மை தெரிந்துவிடும்.கோபமாக பூங்காவுக்குப் போவார்.அதே நேரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ராஜூவை நெற்றியில் ஒரு கைவைத்து எட்டிப் பார்க்க,காமேஷ்வரனும் அதேமாதிரி நெற்றியில் கைவைத்து எட்டிப் பார்க்க,நாகேஷ் அவரைப் பிடித்து இழுத்து,கீழே வைத்து திட்டுவார்.மயக்கம் தெளிந்து கண்திறக்கும் மதன் அடுத்த காட்சியில் தன்னுடன் பிடிப்பட்டவர்களின் கட்டையும் அவிழ்த்துவிடுவார்.இன்னொரு பெண்ணோடு பழகிக்கொண்டே தன் மகளிடமும் பழகும் ராஜூவை அடிப்பதற்காக கால்செருப்பைக் கழற்றிக்கொண்டு வர,திடுமென கையில் உருட்டுக்கட்டையோடு சந்தானபாரதி குறுக்கே பாய்ந்துவந்து மூர்த்தியை முந்திகொண்டு ராஜூவை அடிக்க முயல,அவரைமாதிரியே அடி வைத்து,ஏறத்தாழ ஏதோ நடன அசைவு மாதிரியே கால்களை அகலமாக வைத்து பின்தொடர்ந்து வருவார் வெண்ணிற ஆடை மூர்த்தி. அப்போது சந்தானபாரதி ராஜுவை அடிப்பதற்காக இரண்டு முறை உருட்டுக்கட்டையை ஓங்க,அது வெகு அருகில்,பின்னால் சத்தம் போடாமல் வந்த மூர்த்தியின் தலையில் விழுந்து அவர் மயங்கிவிடுவார்.
   அதே நேரத்தில் பீம்போய்,பீம்போய் என சொல்லிப்பார்த்துக்கொண்டே முட்டி போட்டபடி காமேஷ்வரன் நடக்க,அவரைப் பிடித்து இழுக்க நாகேஷ் வரும் வேளையில் அவரை முந்திகொண்டு ராஜூதான் சட்டையை மாற்றிக்கொண்டு பாடுகிறான் என குஷ்பூ நெருங்க,அப்படியே ஆடிக்கொண்டே வந்தவழியில் திரும்புகிறார் நாகேஷ்.குஷ்பு ராஜூவின் மேல் உருண்டு அவரைக் கடந்து மல்லாந்து படுத்தபடி பாடும் அந்த நொடியில் முட்டிப்போட்டு நடந்துவந்து காமேஷ்வரனை இழுத்துக்கொண்டு போகிறார் நாகேஷ்.தன்னோடு கீழே பாடிக்கொண்டிருந்தவன் எப்படி அதற்கும் மேலே வேறு உடையில் என வியந்து தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார் குஷ்பூ.
   பாடல் முடியப்போகும் தருணத்தில் மைக்கலும்,அவன் தந்தையும் ஒரு மரத்தின் பின்னால் உருட்டுக்கட்டையோடு ஒளிந்து கொள்வார்கள்.பாடிக்கொண்டே குஷ்பூ கமலை ஏமாற்றி,பக்கத்தில் இருந்த இன்னொரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள,ராஜூ தவறுதலாக மைக்கல் மறைந்திருக்கும் மரத்திற்கு அருகில் வர,வசதியாக அவர் மண்டையில் உருட்டுக்கட்டையால் ஓங்கி அடித்துவிட்டு சந்தோசத்தில் தன் தந்தைக்கு சமிக்ஞை கொடுக்க,அவர் சந்தோசத்தோடு தூக்கி அறியும் சாராயபோத்தல் தலையில் பட்டு,மைக்கலும் மயக்கமடைகிறான்.
  இப்படி பல கதாமாந்தர்களையும்,பல காட்சிகளையும் ஒரே பாடலில் பொருத்தமாக இணைத்திருப்பது உண்மையில் சாதாரண விசயமல்ல.இயக்குனரின் புத்திசாலித்தனம் இப்பாடலில் நன்கு புலப்படுகிறது.வெகு பொருத்தமான இசை.காட்சிகளைப் படமாக்கிவிட்டு அந்த இசைக்குப் பொருந்தும்படி எடிட்டிங் செய்வது கஷ்டமான வேலைதான்.உருட்டுக்கட்டையால் அடிக்கும்போது,மற்ற கமல்கள் வந்து நுழையும்போது இப்படி எல்லாவற்றையும் வெகு பொருததமாய் இணைத்திருக்கிறார்கள்.அந்தப் பூங்காவின் அமைப்பும் அருமை.
  வேறு உடையில் இருக்கும் காமேஷ்வரனை ராஜு என நினைத்துப் பாடும்போது 'காதல் மன்னனா நீயும் கண்ணனா,நாளும் ஓர் அலங்காரமா என்ற வரிகள் வருவது வெகு பொருத்தம்.ஏக்கம் வழியும் மலேசிய வாசுதேவன் ஐயாவின் குரல் இப்பாடலில் ரொமாண்டிக்காக ஒலிக்கிறது.அவரின் அந்தக் குரலில் இளமை கொஞ்சுகிறது.ஜானகியம்மாவின் குரலும் பனித்துளி மாதிரி கிறக்கமாய் இறங்குகிறது.இப்பாடல் காட்சியில் அனைத்து கமலும் மதன் வேடத்தில் இருந்ததால் அழகான உடையில் படு அசத்தலாய் இருந்தார்கள்.குஷ்பூவும் நவீன உடை,பறக்கும் கூந்தலில் மிக இளமையாய் இருந்தார்.இன்னும் இப்பாடலைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.இனி பாடல் வரிகளை இரசிக்கலாமா?
  என் அன்பிற்கினிய ஜீவன்,நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சுதாகர்,இந்தப் பாடலைப் பற்றி எழுதப்போகிறேன் என்றதும் தான் வியந்த விசயங்களையும் என்னோடு பகிர்ந்துகொண்ட என் நலம்விரும்பி சுதந்திரன் மற்றும் அனைவருக்காகவும் இந்தப் பாடல் வரிகள்.
 
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
மொட்டுத்தான் வந்து..சொட்டுத்தேன் தந்து
கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
 
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
சேரலாம் ஏறலாம்..
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் தேடலாம்
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
சேரலாம் ஏறலாம்..
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் தேடலாம்
மந்தாரை செடி ஓரம்
கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்
சந்தோசம் பெறலாமா?
அதில் சந்தேகம் வரலாமா?
பந்தக்கால் நட்டு..பட்டுப்பாய் இட்டு
மெல்லத்தான் கிள்ளத்தான் அள்ளத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
 
 
 
 
காதல் மன்னனா?நீயும் கண்ணனா?
நாளும் ஓர் அலங்காரமா?
காதல் மன்னனா?நீயும் கண்ணனா?
நாளும் ஓர் அலங்காரமா?
போடி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா...
போடி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா...
கல்யாணம் முடிக்காது இந்தக் கச்சேரி தொடங்காது
கண்ணாலே அணைபோட்டு இந்தக் காவேரி உடையாது
அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பு எட்டிப்போ அப்பப்பா
 
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
மொட்டுத்தான் வந்து..சொட்டுத்தேன் தந்து
கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான் அப்பப்பா
வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்
அது குத்தால சுகவாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்தப் பெண்ணோட சுகவாசம்
 
 
 

No comments:

Post a Comment