Tuesday, August 14, 2012

வெளியே வில்லன்....வீட்டில் ஹீரோ???? திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்?நேரில் போய்ப் பார்த்துவிடலாமே என ஒரு சனிக்கிழமை காலையில் மலேசியத் தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் திரு.பாலாவை ‘ஞாயிறுகுரல்’ இதழுக்காக சந்திக்க சென்றேன்.நாளிதழில் அவரது முதல் நேர்காணல் என்பதால் என்னை மாதிரியே ஓர் அழகான..(இருந்துவிட்டு போகட்டுமே??) அணிச்சலை வாங்கிகொண்டு போனேன்.அவரது வீட்டை அடைவதற்குள் அவரைப் பற்றி சிறு அறிமுகம். திரு பாலா ‘செம்மண் சாலை’ என்ற மலேசியத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதில் குணச்சித்திர வேடத்தில் கதாநாயகியின் மாமாவின் நண்பராக,’நல்லவராக’ நடித்திருந்தார்.அதன்பிறகு வெளிவந்த ‘எதிர்காலம்’ என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த குணச்சித்திர வேடம்தான் அவரை மக்களிடையே அடையாளம் காட்டியது.அதன்பிறகு ‘சலங்கை’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடித்தார்.வில்லன் என்றாலும் தன் நண்பருக்கு உதவும் நல்ல வில்லனாக நடித்திருந்தார்.அதன்பிறகு ‘விதியின் துண்டுகள்” ( Pieces of Faith) என்ற குறும்படத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வில்லனாக மாறியிருந்தார்.இதோ வில்லனின் வீட்டை அடைந்துவிட்டோம். அவருடைய காதல் மனைவி ஆசிரியை புதல்விதான் என்னை வரவேற்றார்.பாலா குளித்து முடித்து,நெற்றியில் திருநீற்றோடு மாடிப்படிகளில் இறங்கி வந்தார்:நட்போடு கை குலுக்கி நலம் விசாரித்தார்.அவர் எதிரிலேயே அவர் மனைவியிடம் கேட்டேன். உதயா : புதல்வி,உங்கள் கணவர் வீட்டில் வில்லனா?கதாநாயகனா? புதல்வி : உண்மை சொல்லவா?பொய் சொல்லவா? பாலா: (கெஞ்சலாக....) செல்லம்,முப்பத்து முக்கோடி பேர் நேர்காணலைப் படிக்க போறாங்க..கொஞ்சம் நல்லதா சொல்லும்மா புதல்வி : அவரு வீட்டிலும் உண்மையா ஹீரோதான்.வீட்டு வேலை பிரமாதமா செய்வாரு.இன்னைக்கு கூட அவருதான் வீடு கூட்டுனாரு.சமைக்கும்போது நல்லா உதவி செய்வாரு.எனக்கு பசி என்று சொல்லிட்டா போதும் உடனே எதையாவது தயாரிச்சி கொடுத்துடுவாரு. உதயா: அவரு எப்படி சமைக்கறாரு என்று பார்க்கறதுக்குதான் முக்கியமா வந்திருக்கேன்.சரி நீங்க சொல்லுங்க பாலா..உங்க மனைவி எப்படி?கதாநாயகியா இல்லை வில்லியா? பாலா: அவங்கதான் என்னோட முதல் ஆதரவாளர்.எல்லா விசயத்துலயும் எனக்குப் பக்க பலமா இருப்பாங்க.என்னோட நாடக வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுப்பாங்க.அருமையா தோம் யாம் சூப் செய்வாங்க.அப்பப்ப நிறைய பஞ்ச் வசனங்களை எல்லாம் எடுத்துவிடுவாங்க,அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்குவேன்.அடிக்கடி அவங்க பயன்படுத்தற பஞ்ச் வசனங்களில் எனக்கு ரொம்ப பிடிச்சது “சுட்டுப் போட்டாலும் வராது” என்பதுதான். உதயா : ஒருவேளை உங்களுக்கு சமையல் சரியா வராது என்பதுக்காகதான் அந்த வசனத்தை அடிக்கடி சொல்றாங்களோ என்னவோ? பாலா: என்னை காமெடியன் ஆக்கறிங்களே??? L உதயா: சரி,நீங்க சமைக்கறதை நான் படம் பிடிக்கனுமே?? புதல்வி: என் அம்மா வீட்டுக்கு சமைக்கதான் போய்க்கிட்டு இருக்கோம்.அங்க இவரை சமைக்க வெச்சி புகைப்படம் எடுத்துடலாம். (பக்கத்து தாமானில் இருந்த பாலாவின் மாமியார் வீட்டுக்குப் போனோம்.அங்கு கைலான் கீரையை அவரது மனைவி சொல்ல சொல்ல சமைக்க ஆரம்பித்தார்.மிக கிக மெதுவாக கீரையை வதக்க, சட்டிக்கு வலிக்கப் போகுது ஹபி,” என்றபடி மற்ற அயிட்டங்களைச் சமைக்க ஆரம்பித்தார் புதல்வி.எப்படியோ சமைத்து முடித்து நிம்மதியோடு வரவேற்பறைக்குப் போனவர் தன் மாமியாரின் வீட்டில் இருந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.அதற்குள் மதிய உணவு தயாராகிவிட அனிச்சலை வெட்டினார்.புதல்வி மதிய உணவைப் பரிமாறுவதற்குள் வில்லனாய் மாறி மனைவியின் தங்கைக்கு அனிச்சல் ஊட்டிவிட்டு அவருடைய முகத்தில் அனிச்சலை அப்பி அலங்கோலமாக்கினார்.கோபப்படாமல் அக்காட்சியைப் பார்த்து இரசித்தார் புதல்வி.நான் சில கேள்விகளைத் தொடர்ந்தேன்.) உதயா : கதாநாயகனாக நடிக்காமல் வில்லனா நடிக்கிறோமே என எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? பாலா : நிச்சயமா இல்லை,விருப்பப்பட்டுதான் நடிக்கறேன். உதயா : வில்லன் பாத்திரத்தில் மறக்க முடியாத தருணம்? பாலா: நான் இறந்து போன காட்சிதான் (சிரிப்பு) உதயா: மலேசிய நாடக,திரைப்படத் துறையில் வில்லன் நடிகர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? பாலா : மலேசிய மக்கள் பெரும்பாலும் நகைச்சுவைப் படங்களை அதிகமாய் விரும்புவதால் வில்லன்களுக்கு மௌசு கொஞ்சம் குறைவுதான். உதயா : இத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு? பாலா : என் திறமைக்கேற்ற வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்,எந்த வேடமானாலும் நடிக்க தயார். வேற எதுவும் கேள்விகள் இருக்கா? (கண்களை உருட்டுகிறார்) உதயா : இல்லை,நான் உங்களைப் பேட்டி எடுக்க வரலை,வில்லன்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என பார்க்கவே வந்தேன்,அப்படியே கொஞ்சமாய்ப் பேட்டி.. மதிய உணவு தயாராகிவிடவே,கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என ரசம்,உருளைக்கிழங்கு பிரட்டல்,கைலான் கீரை பிரட்டல்,காய்கறி பிரட்டல்,அப்பளம்,மீன் சம்பல் என்று பலவித அயிட்டங்களைப் பரிமாற ஆரம்பித்தார் புதல்வி.என் பக்கத்தில் அமர்ந்த பாலா, “நான் சமைச்ச கீரையைச் சாப்பிட்டு பாருங்களேன்,” என்றார்.பயந்து போய் தட்டைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டேன். “ நான் அதிக நாள் உயிர் வாழ ஆசைப்படறேன் அண்ணா,” என்றபடி விரைவாக சாப்பிட்டு எழுந்தேன்.தன் மனைவியின் குடும்பத்தோடு அவர் பழகிய விதம்,அவர்களுக்கிடையில் இருந்த அந்நியோன்யமான உறவு,கலாட்டா யாவற்றையும் இரசித்தவாறு விடைபெற்றேன். “ நான் உண்மையில் நெத்திலி சம்பல் ரொம்ப சுவையா சமைப்பேன்,அடுத்த வாரம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க,சமைச்சி தரேன்,” என்று அழைப்பு விடுத்தார்.எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் ஆயிற்றே??நேரம் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன் என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினேன். ( பாலா அவர்கள் வெகு பிரசித்தி பெற்ற வில்லன் நடிகர் அல்லதான்,ஆனாலும் புகழ பெற்றவர்கள் யாவருமே ஒரு காலத்தில் சிறிய நடிகராக அறிமுகமாகி இருந்தவர்கள்தானே?அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் பிரகாசிப்பார்,தினக்குரலும் வாழ்த்துகிறது..) - உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்

வளையல் பெண்ணோடு வண்ணத்திரை பிரபலங்கள் - 12 ஆகஸ்ட் 2012

வெளியே வில்லன்....வீட்டில் ஹீரோ???? திரைப்படங்களில் வில்லனாக நடிப்பவர்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள்?நேரில் போய்ப் பார்த்துவிடலாமே என ஒரு சனிக்கிழமை காலையில் மலேசியத் தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் திரு.பாலாவை ‘ஞாயிறுகுரல்’ இதழுக்காக சந்திக்க சென்றேன்.நாளிதழில் அவரது முதல் நேர்காணல் என்பதால் என்னை மாதிரியே ஓர் அழகான..(இருந்துவிட்டு போகட்டுமே??) அணிச்சலை வாங்கிகொண்டு போனேன்.அவரது வீட்டை அடைவதற்குள் அவரைப் பற்றி சிறு அறிமுகம். திரு பாலா ‘செம்மண் சாலை’ என்ற மலேசியத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதில் குணச்சித்திர வேடத்தில் கதாநாயகியின் மாமாவின் நண்பராக,’நல்லவராக’ நடித்திருந்தார்.அதன்பிறகு வெளிவந்த ‘எதிர்காலம்’ என்ற திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த குணச்சித்திர வேடம்தான் அவரை மக்களிடையே அடையாளம் காட்டியது.அதன்பிறகு ‘சலங்கை’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக வில்லன் வேடத்தில் நடித்தார்.வில்லன் என்றாலும் தன் நண்பருக்கு உதவும் நல்ல வில்லனாக நடித்திருந்தார்.அதன்பிறகு ‘விதியின் துண்டுகள்” ( Pieces of Faith) என்ற குறும்படத்திலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வில்லனாக மாறியிருந்தார்.இதோ வில்லனின் வீட்டை அடைந்துவிட்டோம். அவருடைய காதல் மனைவி ஆசிரியை புதல்விதான் என்னை வரவேற்றார்.பாலா குளித்து முடித்து,நெற்றியில் திருநீற்றோடு மாடிப்படிகளில் இறங்கி வந்தார்:நட்போடு கை குலுக்கி நலம் விசாரித்தார்.அவர் எதிரிலேயே அவர் மனைவியிடம் கேட்டேன். உதயா : புதல்வி,உங்கள் கணவர் வீட்டில் வில்லனா?கதாநாயகனா? புதல்வி : உண்மை சொல்லவா?பொய் சொல்லவா? பாலா: (கெஞ்சலாக....) செல்லம்,முப்பத்து முக்கோடி பேர் நேர்காணைப் படிக்க போறாங்க..கொஞ்சம் நல்லதா சொல்லும்மா புதல்வி : அவரு வீட்டிலும் உண்மையா ஹீரோதான்.வீட்டு வேலை பிரமாதமா செய்வாரு.இன்னைக்கு கூட அவருதான் வீடு கூட்டுனாரு.சமைக்கும்போது நல்லா உதவி செய்வாரு.எனக்கு பசி என்று சொல்லிட்டா போதும் உடனே எதையாவது தயாரிச்சி கொடுத்துடுவாரு. உதயா: அவரு எப்படி சமைக்கறாரு என்று பார்க்கறதுக்குதான் முக்கியமா வந்திருக்கேன்.சரி நீங்க சொல்லுங்க பாலா..உங்க மனைவி எப்படி?கதாநாயகியா இல்லை வில்லியா? பாலா: அவங்கதான் என்னோட முதல் ஆதரவாளர்.எல்லா விசயத்துலயும் எனக்குப் பக்க பலமா இருப்பாங்க.என்னோட நாடக வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுப்பாங்க.அருமையா தோம் யாம் சூப் செய்வாங்க.அப்பப்ப நிறைய பஞ்ச் வசனங்களை எல்லாம் எடுத்துவிடுவாங்க,அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்குவேன்.அடிக்கடி அவங்க பயன்படுத்தற பஞ்ச் வசனங்களில் எனக்கு ரொம்ப பிடிச்சது “சுட்டுப் போட்டாலும் வராது” என்பதுதான். உதயா : ஒருவேளை உங்களுக்கு சமையல் சரியா வராது என்பதுக்காகதான் அந்த வசனத்தை அடிக்கடி சொல்றாங்களோ என்னவோ? பாலா: என்னை காமெடியன் ஆக்கறிங்களே??? L உதயா: சரி,நீங்க சமைக்கறதை நான் படம் பிடிக்கனுமே?? புதல்வி: என் அம்மா வீட்டுக்கு சமைக்கதான் போய்க்கிட்டு இருக்கோம்.அங்க இவரை சமைக்க வெச்சி புகைப்படம் எடுத்துடலாம். (பக்கத்து தாமானில் இருந்த பாலாவின் மாமியார் வீட்டுக்குப் போனோம்.அங்கு கைலான் கீரையை அவரது மனைவி சொல்ல சொல்ல சமைக்க ஆரம்பித்தார்.மிக கிக மெதுவாக கீரையை வதக்க, சட்டிக்கு வலிக்கப் போகுது ஹபி,” என்றபடி மற்ற அயிட்டங்களைச் சமைக்க ஆரம்பித்தார் புதல்வி.எப்படியோ சமைத்து முடித்து நிம்மதியோடு வரவேற்பறைக்குப் போனவர் தன் மாமியாரின் வீட்டில் இருந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்.அதற்குள் மதிய உணவு தயாராகிவிட அனிச்சலை வெட்டினார்.புதல்வி மதிய உணவைப் பரிமாறுவதற்குள் வில்லனாய் மாறி மனைவியின் தங்கைக்கு அனிச்சல் ஊட்டிவிட்டு அவருடைய முகத்தில் அனிச்சலை அப்பி அலங்கோலமாக்கினார்.கோபப்படாமல் அக்காட்சியைப் பார்த்து இரசித்தார் புதல்வி.நான் சில கேள்விகளைத் தொடர்ந்தேன். உதயா : கதாநாயகனாக நடிக்காமல் வில்லனா நடிக்கிறோமே என எப்போதாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? பாலா : நிச்சயமா இல்லை,விருப்பப்பட்டுதான் நடிக்கறேன். உதயா : வில்லன் பாத்திரத்தில் மறக்க முடியாத தருணம்? பாலா: நான் இறந்து போன காட்சிதான் (சிரிப்பு) உதயா: மலேசிய நாடக,திரைப்படத் துறையில் வில்லன் நடிகர்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? பாலா : மலேசிய மக்கள் பெரும்பாலும் நகைச்சுவைப் படங்களை அதிகமாய் விரும்புவதால் வில்லன்களுக்கு மௌசு கொஞ்சம் குறைவுதான். உதயா : இத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு? பாலா : என் திறமைக்கேற்ற வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்,எந்த வேடமானாலும் நடிக்க தயார். வேற எதுவும் கேள்விகள் இருக்கா? (கண்களை உருட்டுகிறார்) உதயா : இல்லை,நான் உங்களைப் பேட்டி எடுக்க வரலை,வில்லன்கள் வீட்டில் எப்படி இருப்பார்கள் என பார்க்கவே வந்தேன்,அப்படியே கொஞ்சமாய்ப் பேட்டி.. மதிய உணவு தயாராகிவிடவே,கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என ரசம்,உருளைக்கிழங்கு பிரட்டல்,கைலான் கீரை பிரட்டல்,காய்கறி பிரட்டல்,அப்பளம்,மீன் சம்பல் என்று பலவித அயிட்டங்களைப் பரிமாற ஆரம்பித்தார் புதல்வி.என் பக்கத்தில் அமர்ந்த பாலா, “நான் சமைச்ச கீரையைச் சாப்பிட்டு பாருங்களேன்,” என்றார்.பயந்து போய் தட்டைத் தூக்கிக்கொண்டு எழுந்துவிட்டேன். “ நான் அதிக நாள் உயிர் வாழ ஆசைப்படறேன் அண்ணா,” என்றபடி விரைவாக சாப்பிட்டு எழுந்தேன்.தன் மனைவியின் குடும்பத்தோடு அவர் பழகிய விதம்,அவர்களுக்கிடையில் இருந்த அந்நியோன்யமான உறவு,கலாட்டா யாவற்றையும் இரசித்தவாறு விடைபெற்றேன். “ நான் உண்மையில் நெத்திலி சம்பல் ரொம்ப சுவையா சமைப்பேன்,அடுத்த வாரம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க,சமைச்சி தரேன்,” என்று அழைப்பு விடுத்தார்.எனக்குப் பிடித்த நெத்திலி சம்பல் ஆயிற்றே??நேரம் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன் என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினேன். ( பாலா அவர்கள் வெகு பிரசித்தி பெற்ற வில்லன் நடிகர் அல்லதான்,ஆனாலும் புகழ பெற்றவர்கள் யாவருமே ஒரு காலத்தில் சிறிய நடிகராக அறிமுகமாகி இருந்தவர்கள்தானே?அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் நிச்சயம் பிரகாசிப்பார்,தினக்குரலும் வாழ்த்துகிறது..) - உதயகுமாரி கிருஷ்ணன், பூச்சோங்