Thursday, April 7, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 11

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 11




 
உன்னைக் கேட்கவே வந்தேன்
ஓர் ஆசை வாசகம்..
நீயா என்னிடம் கேட்டாய்??
ஒரு காதல் யாசகம்….
  
       அலைபாயுதே கண்ணா என்று இசைத்த கைத்தொலைபேசியைக் கையில் எடுத்தாள் அகல்யா.வருணிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
       எங்க இருக்க டியர்?”
       பஸ்ல இருக்கேன்
       அட என்னருமை காதலியே... பஸ் எங்கே இருக்கு?”
       பஸ் ரோட்ல் இருக்கு
        படுத்தாதே அகல்யா, என்னைப் பார்க்க வர்றியா இல்லையா?”
        நான் இப்ப வேற இடத்துக்குப் போய்க்கிட்டிருக்கேன்,
        எங்க?”
        அதை கேட்கக்கூடாது
        சரி வரப்ப எங்க இருந்து வருவே?”
        எங்க போறேனோ அங்க இருந்து வருவேன்,” பேருந்து இரைச்சலில் அவன் பேசியது சரியாக விளங்காததால் தொடர்பைத் துண்டித்தாள்.
         வருணுக்குப் புரிந்து போனது.அவள் கோபமாய் இருக்கிறாள் என்று.இப்படியே விட்டால் அவள் ஒரு வாரம் கூட அவனுடன் பேசாமல் இருப்பாள்.எனவே அவளைச் சமாதானப்படுத்த எண்ணி அவனே மீண்டும் அழைத்தான்.
         அன்னைக்கு மண்டபத்துல என்னை அறவே தெரியாத மாதிரி என்ன அழகா நடிச்சீங்க? கண்ணு கூசுதுன்னீங்க? தள்ளி உட்கார சொன்னீங்க?”
         நீதானே சொன்ன?எனக்கும் உனக்கும் பழக்கம் இருக்குன்னு கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்னு,”
         அதுக்குன்னு இந்த மாதிரிதான் ஓவரா நடிக்கறதா?” எனக்குத் தெரியும்,உங்க பரம ரசிகைங்க எல்லாம் வந்திருப்பாங்கள்ல,அதான்
         சரி மன்னிச்சிடு,இப்பவே பத்து தோப்புக்கரணம் போடறேன்
        அகல்யாவுக்குச் சிரிப்புதான் வந்தது.இந்த வருணுக்காக ஒரு காலத்தில் எப்படியெல்லாம் ஏங்கினாள்.அவன் கருப்பா சிவப்பா உயரமா குள்ளமா நல்லவனா கெட்டவனா எதுவுமே தெரியாமல் வானொலியில் அவனுடைய குரலை மட்டும் கேட்டே அவன் மீது பித்து பிடித்து  அலைந்தவளை அவளுடைய தோழிகள் என்னவெல்லாம் சொன்னார்கள்?பைத்தியக்காரத் தனமாய் நடந்து கொள்கிறாள் என்றார்கள்.வருண் அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை என்றhர்கள்.
        ஆனால் பலர் பல மாதிரி சொல்லியும் அவள் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை/எப்போதும் போல் அவன் மீது பைத்தியமாகதான் அலைந்தாள்.கல்லூரித் தோழிகளிடம் அவனைத் தன் மாமா என்று உரிமை கொண்டாடுவாள்.தூக்கத்தில் அவனை நினைத்து உளறியிருக்கிறாள்.அவனுடைய குரலை ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்வாள்.அவன் பெண் நேயர்களிடம் சிரித்துப் பேசிவிட்டால் முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வாள்.குறிப்பிட்ட நாட்களில் அவன் வராது போனால் அந்த ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாமல் அழுதுவிடுவாள்.சில சமயங்களில் அவன் வேறு யாரையாவது நேசித்து விடுவானோ என்று சுயமாக கற்பனை செய்து கொண்டும் அழுதிருக்கிறாள்.பல நாட்கள் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவளுக்கு வந்ததுண்டு.ஏக்கங்களையெல்லாம் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு அவனைச் சந்திப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இரண்டாண்டுகள் காத்திருந்தாள்.இந்த இரண்டு ஆண்டுகளில் அவனுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதி வைத்திருந்தாள்.அவை எல்லாவற்றையும் ஒரு நாள் துணிந்து தபாலில் அனுப்பி வைத்தாள்.ஏறக்குறைய 200 கடிதங்கள்.அக்கடிதங்களையெல்லாம் படித்து முடிக்க அவனுக்கு ஒரு மாத காலம் பிடித்தது.தன்னுடைய ரசிகைகளில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவளாக இருக்கிறாளே என்று வியந்தான்.அப்போதே அவன் மனதிலும் அவளை நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
         அவனை முதன்முதலாக சந்தித்தபோது நடந்த அனைத்தும் அகல்யாவுக்கு நன்றாக நினைவிலிருந்தது.அவனிடம் புதிதாக வாங்கிய தன்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தைக் கொடுத்து முதல் பக்கத்திலேயே ஏதாவது வாசகம் எழுதி கையொப்பமிட சொன்னாள்.
        ரோஜாக்களுக்கு மத்தியில் முட்கள் இருப்பதையெண்ணி வருத்தப்படாதே,முட்களுக்கு மத்தியிலும் ரோஜாக்கள் மலர்வதையெண்ணி சந்தோழூப்படு,”
                                - என்றென்றும் பிரியமுடன் வருணன் 
         என்று எழுதி கொடுத்தான், (அன்றிலிருந்து அது அவளுக்குப் பிடித்த வாசகமாகிப் போனது,) 
         அப்புறம் என்னை நேர்ல பார்க்கனும் என்ற உங்க ஆசை நிறைவேறிடுச்சா?” அவளுடைய சின்னஞ்சிறு கருவண்டு விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேட்டான் வருண்.நேரில் அவனுடைய குரல் இன்னும் இளமையாவும்,கவர்ச்சியாகவும் இருந்தது.
        அவளுடைய ஆசைகள் எல்லாம் ஒரு நாளில் தீர்ந்துவிட கூடியவையா என்ன?இன்னும் எவ்வளவோ இருக்கின்றன?அவனுடன் கைகோர்த்தபடி ஷாப்பிங் செல்ல வேண்டும். ஒரே வாக்மேனை இவள் ஒரு காதிலும் அவன் ஒரு காதிலும் பொருத்திக்கொண்டு மென்மையான பாடல்களைக் கேட்க வேண்டும் இப்படி எவ்வளவோ ஆசைகள் இருக்கின்றனதான்,அதையெல்லாம் சொன்னால் என்ன இது அபத்தமாக இருக்கிறது என்று முகம் சுளிக்க மாட்டானா?அதையெல்லாம் விட அபத்தமான ஒன்று இருக்கிறதே?அதுதான் அவனுடைய அந்த நீளமான மூக்கை ஒரு தடவை பிடித்து இழுத்துப் பார்க்க வேண்டுமென்பது…”
        மணியாச்சி கிளம்பலாமா?” அவன் வேண்டுமென்றே மிகவும் சீரியஸாக இருந்தான்.
       இவன் சிரிப்பதெல்லாம் வானொலியில் மட்டும்தானா?” என முணுமுணுத்தவள் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாக எழ, அவளுடைய காலணிகளில் ஒன்று பட்டென்று அறுந்து போனது.பேருந்து நிலையம் தூரமாக இருந்ததாலும் அருகில் எந்த காலணி கடையும் இல்லை என்ற காரணத்தினாலும் மிக மிக மெதுவாக அவள் நடக்க அவனும் அவளுக்கு ஈடாக மெதுவாக நடந்து வந்தான்.
      பேருந்து நிலையம் இன்னும் தூரமாக இருந்திருக்க கூடாதா?” என அவள் ஏங்க….
      அவளுடைய இன்னொரு காலணியும் அறுந்து போயிருக்க கூடாதா என அவன் ஏங்கியதை கடைசி வரை அவள் அறியவேயில்லை.
      கோத்தாராவில் அவளுக்குப் புதிய காலணிகளை வாங்கி கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து போனான்.சினிமாவில் வருவது போன்று கொஞ்ச தூரம் போன பிறகு கூட திரும்பி பார்க்கவில்லை அவன்.ஒரு கையசைத்தல் கூட இல்லை.அதன்பிறகு அவனிடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை.அவன் தன் நம்பிக்கையை குலைக்கும் வகையில் எதையாவது பேசிவிடுவானோ என்ற பயத்தில் அவளும் அவனைத் தொடர்புக் கொள்ளவில்லை.
      ஆனால் அவள் மனம் பெரும் வருத்தத்தில் இருந்தது.வருணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என எண்ணினாள்.தான் அவனுக்குப் பரம ரசிகையாக இருப்பதை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லையே என வருந்தினாள்.

* * * * *
     என்னோட ரசிகையா இருக்கற உனக்கு என்னோட மனைவியா வர சம்மதமா?” ஒரு பெரிய அதிர்ச்சியை மின்அலைகளாக மாற்றி இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவளுடைய கைத்தொலைபேசிக்கு அனுப்பிவைத்தான் வருண்,
      அந்நேரத்தில் வானொலி கேட்டுக்கொண்டே பாடம் படித்துக் கொண்டிருந்த அகல்யா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து பொத்தென்று விழுந்தாள்.
      உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் அங்கே..
      பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே?
     அகல்யாவுக்கும் சித்ராவுடன் இணைந்து பாடவேண்டும் போலிருந்தது.

                                                   தொடரும் …..

No comments:

Post a Comment