Sunday, February 19, 2012

Neeyum Naanum 4

ஒரு தடவை என்னை ஏசி,நான் அழுதுவிட அன்று நீ என்னை வழக்கத்தைவிட விஷேஷமாய் கவனித்ததது என்னுள் ஏக்கமாய்ப் பதிந்துவிட,மீண்டும் அதில் கிறங்கி போக எண்ணிய நான் ஒரு பொழுதில் வேண்டுமென்றே நீ அதிக வேலையாய் இருக்கும் சமயம் உன்னிடம் வம்பு பண்ணுவேனாம்.நான் அனுப்பிய குறுந்தகவல் உனக்கு என்மீது கோபத்தை உண்டு பண்ணிவிட்டது என்று வேண்டுமென்றே விளையாட்டுக்கு குறுந்தகவல் மூலம் சொல்வேனாம்.நீ அதிக வேலையாக இருப்பதால் பதில் அனுப்ப மாட்டாயாம்..எனக்குத்  தெரிந்தும் வேண்டுமென்றே அந்த எஸ்.எம்.எஸ் அனுப்பிய என் கையைத் தண்டிக்கப் போகிறேன்,இனி அந்தக் கையால் கைபேசியைப் பிடித்து எந்தக் குறுந்தகவலும் அனுப்ப முடியாது,’ என குறுந்தகவல் அனுப்பி வைப்பேனாம்.நீ கோபத்தோடு வீட்டுக்கு வருவாயாம்..நான் வேண்டுமென்றே என் கைகளை மறைத்துக்கொண்டு பேசாமல் இருப்பேனாம்.நீ அதிகமாய் இரசித்து,நேசிக்கும் கதை எழுதும் என் வளையல் கையை ஏதோ பண்ணிவிட்டேன் என்று நீ ஆத்திரத்தோடு என்னை நெருங்குவாயாம்.ஓங்கி ஓர் அறை விடவேண்டும் என எண்ணிக்கொண்டே நான் பின்னால் மறைத்து வைத்திருந்த என் கையைப் பற்றி இழுத்து பார்ப்பாயாம்..வண்ண வண்ண வளையல்கள் அணிந்து,நன்கு சிவந்த மருதாணியோடு என் கை மிகவும் அழகாக இருக்குமாம்.நீங்க ரொம்ப நேசிக்கற,உங்களுக்குச் சொந்தமான இந்தக் கையைத் தண்டிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு??அதான் இப்படி அழகுப்படுத்தி வெச்சிருக்கேன்..அன்புத் தண்டனை,” என சொல்லிவிட்டு உன்னைப் பார்த்து முறைப்பேனாம்.உன் கோபம் பட்டென மறைந்து வழக்கமாய் என்னை மயக்கும் சிரிப்பு சிரித்துக்கோண்டே,”உன் விளையாட்டு ரசனைக்கு ஓர் அளவே இல்லையா? என கேட்டுக்கொண்டே என் வளை கையில் ஒரு முத்த வளையல் பதித்து என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்வாயாம்..

No comments:

Post a Comment