Saturday, February 18, 2012

நீயும் நானும் 5

நீயும் நானும் 5

பனி தூறும் ஓர் அதிகாலப் பொழுதில் நான் 3 மணிக்குத் துயில் களைவேனாம்.என் இடையை உரிமையோடு வளைத்திருக்கும் உன் கையை மெதுவாய் விலக்கிவிட்டு தூங்கும் உன்னை ஒரு கணம் இரசிப்பேனாம்.பிறகு விடுவிடுவென வீட்டைக்கூட்டி,துடைத்து, சமையல் செய்வேனாம்.சமையல் முடிந்ததும் குளித்துவிட்டு வந்து மணியாகிவிட்டதாக பொய்ச் சொல்லி உன்னை எழுப்புவேனாம்.தூக்கத்தில் சிணுங்கும் உன்னைத் தள்ளிக்கொண்டு போய் குளியலற...ையில் விட்டு,உன் தலையில் தண்ணீரை ஊற்றுவேனாம்.வேறு வழியின்றி நீ குளித்துவிட்டு வருவதற்குள் வீடு முழுக்க கமகமவென சாம்பராணி புகையைப் போட்டு வைப்பேனாம்.உன்னை அழைத்துக்கொண்டு போய் பசியாற வைப்பேனாம்.உண்மை அறியும் நீ செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு எனக்கும் ஊட்டிவிடுவாயாம்.வாசமான சாம்பராணி புகையை நுகர்ந்துகொண்டே இருவரும் சுடசுட தேநீரைச் சுவைப்போமாம்.பிறகு இருவரும் அந்தப் பனி பொழுதில்,குயில் கூவும் ஓசையைக் கேட்டுக்கொண்டே,கைகள் கோர்த்தபடி நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வீட்டுக்கு வெளியே உலாவுவோமாம்.எனக்குத் தூக்கம் வந்ததும் நீ என்னை வீட்டுக்குள் அழைத்து வந்துவிடுவாயாம்.குளிர் தாங்க முடியாத நான் உன் மார்பில் முழுவதுமாய் என்னைப் புதைத்துக்கொண்டு படுத்திருப்பேனாம்,உனக்கு உறக்கம் கலைந்து போனாலும் எனக்காக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி படுத்திருப்பாயாம்.உன் ‘கதகதப்பில்’ சுகமாய் உறங்கி போவோமாம் நானும் உன் அன்பின் சின்னமாய் என் வயிற்றில் வளரும் ஓவியா குட்டியும்.

1 comment: